உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை.! போலீசார் கைது.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள கிஷோரோ நகரில் வசித்து வந்தவர் இந்தியாவை சேர்ந்த குந்தாஜ் படேல்(24). இவர் அதே நகரில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். 

இந்நிலையில் கடந்த 27-ந்தேதி குந்தாஜ் படேல் வழக்கம்போல் கடையில் ஊழியர் ஒருவருடன் வாடிக்கையாளர்களை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது எலியோடா குமிசாமு(21) என்ற போலீஸ்காரர் ஒருவர் குந்தாஜ் படேலின் கடைக்குள் புகுந்து தனது துப்பாக்கியை எடுத்து குந்தாஜ் படேலை சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இருப்பினும் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, அவரை போலீசில் ஒப்படைத்தனர். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த குந்தாஜ் படேலை கடையின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியாத நிலையில், கைது செய்யப்பட்ட போலீஸ்காரரிடம், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian businessman shot dead in Uganda


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->