#சிங்கப்பூர் || லஞ்சம் வாங்கிய இந்திய வம்சாவளி அதிகாரிக்கு சிறை தண்டனை.! நீதிமன்றம் அதிரடி.!
Indian origin airport officer jailed for 3 years for taking bribes in Singapore
சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய வம்சாவளி விமான நிலைய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் இந்திய வம்சாவளியான பிரேம்குமார் (42). இவர் 2015 முதல் டிசம்பர் 2017 வரை வாகனம் ஓட்டுவதற்கான தேவையான கோட்பாடு மற்றும் நடைமுறை சோதனைகளில் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்திருந்தும், தகுதியற்ற தொழிலாளர்களுக்கு ஏர்சைட் டிரைவிங் பெர்மிட் வழங்க லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து இத்தொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், இவருக்கு 3 ஆண்டு இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும், ரூபாய் 4.62 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 15 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Indian origin airport officer jailed for 3 years for taking bribes in Singapore