அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக்கொலை.!
Indian origin shot dead in America
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்த்தின் டேகோனி நகரில் உள்ள பெரிய வணிகத் தெருவான டோரெஸ்டேல் அவென்யூவில் உள்ள எரிவாயு நிலையதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 66 வயதான பட்ரோ சிபோராம் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் திடீரென எரிவாயு நிலையத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் பணியில் இருந்த இந்திய வம்சாவளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், பெட்ரோவின் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொள்ளையர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு 20 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பரில், மிசிசிப்பியின் டுபெலோவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian origin shot dead in America