நியூயார்க் விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் பலி.!!
Indian Origin Woman Killed In New York Plane Crash
அமெரிக்கா நியூயார்க்கில் நடந்த விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ரோமா குப்தா(63) மற்றும் அவரது மகள் ரீவா குப்தா (33) ஆகிய இரண்டு பேரும் லாங் ஐலேண்டில் உள்ள குடியரசு விமான நிலையத்திற்கு ஒற்றை எஞ்சின் நான்கு இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது நியூயோர்க்கின் நார்த் லிண்டன்ஹர்ஸ்டில் அருகே திடீரென நடுவானில் விமானம் தீப்பிடித்துள்ளது.
இதையடுத்து விமானி விமானத்தை தரையிறக்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் ரோமா குப்தா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
மேலும் மகள் ரீவா குப்தா மற்றும் விமானி பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்டோனி புரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
Indian Origin Woman Killed In New York Plane Crash