அமெரிக்கா: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தலைமை நீதிபதியாக நியமனம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தின் அயர் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேஜல் மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் மாஸசூசெட்ஸின் கான்காா்ட் பகுதியைச் சோ்ந்த தேஜல் மேத்தா, அயர் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக இணை நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது அதே நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாவட்ட தலைமை நீதிபதி ஸ்டேசி போர்டெஸ், தேஜல் மேத்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தேஜல் மேத்தா, சமூகத்தில் நீதியின் உண்மையான தாக்கத்தை நிலை நிறுத்துவதற்கும், மக்களை கருணையுடன் நடத்துவதற்கும் உறுதியளித்துள்ளார். மேலும் வழக்கறிஞராக இருக்கும் பொழுது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொதுமக்களுக்கு உதவ முடியும். ஆனால் தற்போது நீதிபதியாக இருக்கும் பொழுது பல்வேறு உதவிகளை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian origin women appointed as chief justice in court in america


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->