வரலாறு காணாத வகையில் சரிவை கண்ட இந்திய ரூபாய்..! - Seithipunal
Seithipunal


நேற்று, வரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடும் சரிவைக் கண்டது.

இந்திய ரூபாயின் மதிப்பு 90 காசுகள் குறைந்து, 80.86 ரூபாயாக சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து, இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு சரிவைக் கண்டது.

நேற்று, சந்தை துவக்கத்தில் 80.27 ரூபாயாக இருந்த ரூபாயின் மதிப்பு, சில நாட்களுக்கு பிறகு 80.95 ரூபாய் என்ற அளவுக்கு கடும் சரிவைக் கண்டு, இறுதியில் 80.86 ரூபாயாக நிலைபெற்றது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பின் காரணமாக அன்னிய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது. ஆனால், உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றில் அதிக ஏற்றம் இல்லாததன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு கடும் சரிவைக் கண்டிருப்பதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வங்கியின் வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பேங்க் ஆப் இங்கிலாந்தும் தனது வங்கியின் வட்டியை உயர்த்தி உள்ளது. இதேபோல், பேங்க் ஆப் ஜப்பானும் வட்டியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian rupee coin value decrease


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->