நடுவானில் பறந்த இண்டிகோ விமானம்.! திடீரென தரையிறக்கப்பட்டதற்கு காரணம் என்ன?
indigo flight emergency landing in Shamshabad airport
நடுவானில் பறந்த இண்டிகோ விமானம்.! திடீரென தரையிறக்கப்பட்டதற்கு காரணம் என்ன?
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி நகர் நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று 137 பயணிகளுடன் புறப்பட்டுத் சென்றது.
இந்த நிலையில், இந்த விமானத்தில் இன்று காலை திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதையறிந்த விமானி சம்பவம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விமானம் காலை 6.15 மணியளவில் தெலுங்கானா மாநிலத்தில் ஷம்ஷாபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குடிமக்கள் விமான போக்குவரத்து இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமானம் வேறு பகுதிக்கு திசைமாற்றி விடப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன் படி, சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானம் திடீரென தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
indigo flight emergency landing in Shamshabad airport