இந்தோனேசிய || புதுப்பிக்கும் பணியில் இடிந்து விழுந்த பெரிய மசூதி.! வைரலாக வீடியோ..! - Seithipunal
Seithipunal


நேற்று இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பகுதியில் உள்ள பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் பெரும் தீவிபத்தில் இடிந்து விழுந்தது. இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

இந்த தீ விபத்தில் எந்தவிதமான உயிரிழப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மசூதியின் குவிமாடம் புதுப்பிக்கும் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, மசூதியின் குவிமாடம் இடிந்து கீழே விழுவதற்கு சற்று முன்பு அதிலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பியதை வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன. இதுவரை தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. மசூதி இடிந்து விழுந்த அந்த நேரத்தில் இஸ்லாமிய மையம் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தீ விபத்து அல்லது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடிபாடுகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கட்டிடத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மசூதியைத் தவிர, இஸ்லாமிய மைய வளாகத்தில் கல்வி, வணிக மற்றும் ஆராய்ச்சி வசதிகளும் உள்ளன. 

இந்த மசூதியின் குவிமாடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் போது இதேபோன்று தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது ஏற்பட்ட தீயுடன்   தீயணைப்பு வீரர்கள் 5 மணிநேரம் போராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indonesia renovation work masoothi fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->