கடந்த 48 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் பணவீக்கம் 27.55% உயர்வு.!
Inflation in Pakistan is 27 point 55 percentage higher than last 48 years
கடந்த 48 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் பணவீக்கம் 27.55% அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உள்நாட்டு உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், சர்வதேச நிறுவனங்களிடம் நிதி உதவியை பாகிஸ்தான் கோரி வருகிறது.
இந்நிலையில் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் பணவீக்கம் 27.55% ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அன்னிய செலாவணி பற்றாக்குறையால் வெளிநாட்டு கடன்கள் அதிகரித்துள்ளன. இதனால் நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் துறைமுகங்களில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் டாலருக்கு நிகராக பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது. இந்நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவங்க ஐ.எம்.எப் உறுப்பினர்கள் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Inflation in Pakistan is 27 point 55 percentage higher than last 48 years