சொந்த கட்சியிலிருந்து பிரதமர் லிஸ் டிரஸ்-க்கு நெருக்கடி.! வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்வாரா? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்றார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார். 

இந்நிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பை கடன்வாங்கி சரிக்கட்டலாம் எஎன்று  தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ், இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபற்றி அவருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் பி.பி.சி.க்கு பிரட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், "நாம் முற்றிலும் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இதிலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழியில்லை. இதற்கு லிஸ் டிரஸ் வழி கண்டுபிடிப்பார். ஆனாலும் என்னால் அதைப்பார்க்க முடியவில்லை" என்று  தெரிவித்துள்ளார். 

இதற்கு, ரிஷி சுனக்கின் ஆதரவாளரான மெல் ஸ்டிரைட் கருத்து தெரிவிக்கையில், "நிதிச்சந்தைகளில் அரசு நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும், அதில் தெளிவான மாற்றத்தைக் காட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் லிஸ் டிரஸ், தனது சொந்தக்கட்சியில் எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி கையாளப்போகிறார், வரி குறைப்பு திட்டங்களை அவர் மறுபரிசீலனை செய்வாரா என்பது அங்கு பேசுபொருளாகி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland Tax reduction programs president liz truss review


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->