இம்ரான் கான் கைதால் ஏற்பட்ட வன்முறை.! ராணுவ சட்டத்தின்படி விசாரணை தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ராணுவத்தினரால் மே 9ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இதைத் தொடர்ந்து தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்தவர்கள் தலைநகரம் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா மாகனங்களில் பிரதமர் இல்லம், ராணுவ கமாண்டா் இல்லம், மியான்வாலி விமானத் தளம், ராணுவ தலைமையகம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டிடங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். இது தொடர்பாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இம்ரான் கான் கைதை தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், லாகூர் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களை முன்னாள் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பார்வையிட்டார். பின்பு ராணுவ சட்டத்தின் படி வன்முறை மீதான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்படுவோர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் என பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Investigation started by military law on violence for imran khan arrest in Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->