சர்வதேச செஸ் போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை நாடு கடத்தல்.!
iran chess player deportation for playing without wearing hijap in international chess tournament
ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்திரண்டு வயதுடைய மாஷா அமினி என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் கடுமையாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்த நிலையில், பலருக்கு ஆயுள் தண்டனையும், மரண தண்டனையும் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஒன்பது வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை சாரா காடெம் சமீபத்தில் கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் கலந்துகொண்டார்.
அங்கு, அவர் ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து செஸ் வீராங்கனை சாரா காடெம் நாடு கடத்தப்பட்டு, குடும்பத்தினருடன் ஸ்பெயினில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
iran chess player deportation for playing without wearing hijap in international chess tournament