ராணுவம் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொலை...! - Seithipunal
Seithipunal


உலகின் மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் அபு சயாப் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஊடுருவிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பல்வேறு குண்டு வெடிப்புகளையும், தாக்குதல்களையும் நிகழ்த்தி வருகிறது.

இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு மராவி நகரத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையினர், பொதுமக்கள் உட்பட 1200 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மராவி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத குழு தலைவர் ஹட்ஜி சதாரை பிலிப்பைன்ஸ் ராணுவம் தேடி வந்தது.

இந்நிலையில் நேற்று தெற்கு பிலிப்பைன்ஸில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லெப்டினன்ட் ஜெனரல் ராய் கலிடோ தலைமையில் அதிரடிப்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸின் ஐ.எஸ் பயங்கரவாத குழு தலைவர் பஹாருதின் பெனிட்டோ ஹட்ஜி சதார் மற்றும் அவர் உதவியாளர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பிலிப்பைன்ஸில் பதுங்கியிருக்கும் மற்ற பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IS terror group leader shot dead as army attacks in Philippines


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->