"எங்க நித்தியானந்தாவுக்கு இந்தியா தொந்திரவு" கைலாசா சிஷ்யை ஐ.நா.சபையில் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளையும் சார்ந்த கலாச்சார அமைப்புகள் மற்றும் அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்தக் கூட்டத்தில் நித்தியானந்தாவின்  கைலாச நாட்டின் சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்ற பெயரில்  நித்தியானந்தாவின் சிஷ்யை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின.

தற்போது இந்த நிகழ்வுகளைப் பற்றிய உண்மை செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நித்தியானந்தாவின் சிஷ்யை விஜய் பிரியா என்பவர் இந்து மத மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையை புதுப்பித்ததற்காக நித்தியானந்தா இந்தியாவால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார் என்றும், மேலும் கைலாச நாட்டைச் சார்ந்த மக்களும் ஏராளமான துன்பத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்திருக்கிறார். 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தூதரகங்களை கொண்டுள்ள கைலாசாவிற்கு ஐநாவின் பதில் என்ன என்ற ரீதியில் அவர் பேசிய பேச்சுகளால் ஐநா சபை கைலாசவை ஒரு நாடாக அங்கீகரித்து விட்டதா? என்று சந்தேகம் மக்களிடம் எழுந்தது.

உண்மையில் ஐநா சபை ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றால் அதன் உறுப்பு நாடுகளின் கூட்டத்தை கூட்டி பாதுகாப்புக்கு கவுன்சில்களின் ஒப்புதல் பெற்று அந்த நாட்டினைப் பற்றிய ஆய்வு செய்து என பல புரோட்டோகால்கள்  இருக்கின்றன. இவற்றையெல்லாம் கைலாசா பாஸ் செய்வது கடினம். ஐநா சபையின் தாராளக் கொள்கைப்படி தனி மனிதர்களும் அமைப்பு சாரா நிறுவனங்களும் ஐநா சபையின் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. 

இதன் அடிப்படையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிவிட்டு யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்ற ரீதியில் செய்திகளை பரப்பியிருக்கிறது நித்தியானந்தா குழு. நித்தியானந்தாவின் கைலாசா. உண்மை இவ்வாறு இருக்க நித்தியானந்தாவின் கைலாசா பொய் பிரச்சாரங்களை பரப்பி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

is un council accepts kilasa a country the truth is her


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->