காசாவுகுள் விரைவில் தரைவழி தாக்குதல்!! இஸ்ரேல் அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் 12 நாட்களுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காஜா பகுதியில் 3,400 பேரும், இஸ்ரேலில் 1400 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஜாவில் உள்ள கிரேக்க ஆர்த்தாடாக்ஸ் தேவாலயத்தில் அந்நாட்டு மக்கள் தஞ்சம் அடைந்த நிலையில் அதன் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டி உள்ளது. 

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் தற்போது வரை பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவ்வாறான பரபரப்பான போர் சூழலில் அமெரிக்கா அதிபர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியோர் இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கும் பணியில் இஸ்ரேலுடன் துணை நிற்போம் என கூறியுள்ளதால் ஹமாஸை அழிக்கும் நோக்கில் விரைவில் காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோஹவ் கலாண்ட் அறிவித்துள்ளார். இதனால் உலக அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel announced ready to ground attack into Gaza


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->