இஸ்ரேல்-ஹமாஸ் போர்: விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா நிறுவனம்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பாலஸ்தீனியன் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தியது. 

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலினால் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த திடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் அந்த பகுதியை மீட்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடங்கியுள்ளனர். 

ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் மற்றொரு நாடான லெபனான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமான சேவை பயணிகளின் நலன் கருதி அக்டோபர் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel Hamas war continue Air India canceled flight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->