15 நிவாரண பணி ஊழியர்களை வேண்டுமென்றே கொலை செய்துள்ள இஸ்ரேல் ராணுவம்; வீடியோ வெளியான உண்மை..! - Seithipunal
Seithipunal


காசாவில் மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 23-ஆம் தேதி காசாவில் உள்ள ராஃபா நகரத்தில் ஆம்புலன்களில் சென்று கொண்டிருந்த உதவுக்குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 08 பேரும், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த 06 உறுப்பினர்களும், ஐநாவின் (UNWRA) ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உதவிக்குழுவைச் சேர்த்தவர்கள் என்று தெரிந்தே இஸ்ரேல் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது, ஆனால், அதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்தது. அத்துடன், சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. 

இந்நிலையில் அன்றைய தினம் நடந்த தாக்குதல் தொடர்பான, உயிரிழந்த உதவிக்குழுவில் இருந்த பாலஸ்தீனிய ஊழியர் ஒருவரின் செல்போனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவை நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.  அதில், ஊழியர்கள் பயணம் செய்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் நிலையில் இருப்பதும், இஸ்ரேலிய ராணுவத்தினர் வாகனங்களை நோக்கியும் உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலை இஸ்ரேல் வேண்டுமென்றே நடத்தி, உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்துள்ளமை 
அம்பலமாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் மீது சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த காணொளி குறித்து இஸ்ரேல் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli army deliberately killed 15 aid workers Video reveals truth


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->