பரபரப்பு! ஆங்கில மொழியில் ஏன்? தமிழ் மொழியில் கையெழுத்திடுங்கள்..!!! மோடியின் அதிரடி பேச்சு - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் ராமேசுவரத்தில் பாம்பன் பாலத்தினைபிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து, ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டதுடன், வாகன பேரணியும் நடத்தினார்.

அந்நேரம் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் அவருக்கு சாலையோரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பியதுடன், வரவேற்பும் தெரிவித்தனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி:

பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அவர் பேசியதாவது, "இன்று ராம நவமி நாள். அயோத்தியிலுள்ள ராமர் கோவிலில் கடவுள் ராமருக்கு, சூரியனின் கதிர்கள் சூரிய திலகம் வைத்துள்ளது.சமயநெறி சார்ந்த ராமேசுவரம் நிலத்திலிருந்து நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழகத்திலுள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்திலுள்ளது. கையெழுத்தேனும் தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவனது,"நூறாண்டுக்கு முன்பு பாம்பன் பால கட்டுமான பணியில் ஈடுபட்டவர் ஒரு குஜராத்தி. புதிய பாம்பன் பாலத்தினை ஒரு குஜராத்தியாகிய நான்தான் திறந்து வைத்திருக்கிறேன்" என்று அவர் பெருமையுடன் பேசியுள்ளார்.இது தற்போது டிவிட்டர் போன்ற இணைய தளத்தில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why English Sign in Tamil Modi speech


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->