3 பாலஸ்தீன ஆயுததாரிகள் சுட்டுக் கொலை - இஸ்ரேல் ராணுவம் அதிரடி - Seithipunal
Seithipunal


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத்தினர் மூன்று ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்களை சுட்டுக்கொன்றனர்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் வடக்கு நகரமான நப்லசுக்கு மேற்கே ஜிட் சந்திப்புக்கு அருகில் உள்ள இராணுவ நிலையத்தின் மீது ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள், ஜிஹாத் முகமது அல்-ஷாமி(24), உதய் ஓத்மான் அல்-ஷாமி(22) மற்றும் முகமது ரேட் டபீக்(18) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று எம்-16 துப்பாக்கிகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் பயன்படுத்திய ஒரு கைத்துப்பாக்கியை கைப்பற்றியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israeli army shoots dead three Palestinian gunmen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->