ஒவ்வொரு நான்கு வினாடிகளிலும் ஒருவர் பட்டினியால் இறப்பதாக தகவல்.!
It is reported that one person dies of hunger every four seconds
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஆக்ஸ்பாம், சேவ் தி சில்ட்ரன் மற்றும் பிளான் இன்டர்நேஷனல் உட்பட 75 நாடுகளைச் சேர்ந்த 238 அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.
பன்னாட்டு சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், தானிய ஏற்றுமதி தடை, வளர்ந்து வரும் நாடுகளில் மெத்தன போக்கு மற்றும் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் உலகில் 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கி செல்வதாக தொண்டு நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு நாளும் 19,700 பேர் பட்டினியால் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டியே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒவ்வொரு நான்கு வினாடிகளிலும் ஒருவர் பசியால் இறப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போதைய பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 2019ஐவிட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
It is reported that one person dies of hunger every four seconds