வளர்த்த கோழியால், உயிரை இழந்த 67 வயது முதியவர்.! அதிர்ச்சி சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


மனிதனுக்கு சாவு என்பது தற்போது பல்வேறு விதங்களில் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திருமண மேடையில் மாரடைப்பால் உயிரிழக்கும் மணமகன், எட்டு வயது சிறுவன் மாரடைப்பால் மரணம், நடனம் ஆடிக் கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து மரணம் என்று நொடிப் பொழுதில் பலரது உயிரையும் பல்வேறு நிலைகளில் பறித்துக் கொண்டிருக்கிறது காலம்.

இந்த நிலையில், தான் வளர்த்த கோழியால் ஒரு உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜாஸ்பர் என்ற 67 வயது நபர் கோழி ஒன்றை வளர்த்து வந்தார். இவர் கடந்த வருடம் பலத்த காயங்களுடன் மர்மமாக உயிரிழந்து கிடந்தார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.

இதன் பிரேத பரிசோதனை முடிவில் அவருக்கு கோழி தாக்குதல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கோழி தாக்கிய நேரத்தில் ஜாஸ்ப்பருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்தப்போக்கு கட்டுப்பாடு இல்லாமல் போய் அவர் உயிரை இழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iyarland 67 years Men killed By chick 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->