ஜப்பானில் 3 வது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் உறைந்த மக்கள்!
Japan 3rd powerful earthquake
கடந்த 3 ஆம் தேதி தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 9 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கம் சீனா, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உணரப்பட்டதால் வருகின்ற நாட்களில் அதிக அளவிலான நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து ஜப்பான் ஹோன்ஷு கிழக்கு கடலோரப் பகுதியில் 2 வது முறையாக கடந்த 4 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.
33 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று ஜப்பானின் ஹோன்ஷு நகரில் 3 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
Japan 3rd powerful earthquake