ஜப்பானில் திடீரென குலுங்கிய கட்டிடங்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி.!
Japan miyazaki earthquake
ஜப்பான், மியசாகி மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தென் சீன கடலில் ஓசுமி தீபகற்பத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் மியசாகி மாகாணத்தில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை. மேலும் இதனால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் செய்தல் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
English Summary
Japan miyazaki earthquake