ஜப்பானில் கருக்கலைப்பு மருந்துக்கு அரசு ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் கருக்கலைப்பு மருந்துக்கு அரசு ஒப்புதல்.!

ஆசியாவில் பல தீவுகளால் ஆன நாடு ஜப்பான். இந்த நாட்டில் கருக்கலைப்பு என்பது பெண்கள் அறுவை சிகிச்சை செய்வது என்ற அளவில் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை சற்று சிக்கலானது என்பதால், நாட்டில் கருக்கலைப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். 

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள லைன்பார்மா சர்வதேச நிறுவனம் கருக்கலைப்பிற்காக உருவாக்கிய "மீபீகோ" என்ற மருந்துக்கு ஜப்பானின் சுகாதார அமைச்சகத்தின் மருந்துகள் விவகாரம் மற்றும் உணவு தூய்மைக்கான கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

நாட்டில் பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக குரலெழுப்பிய நிலையில், அதில் பலன் ஏற்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் வழியே பொதுமக்களில் பன்னிரெண்டு ஆயிரம் பேரிடம் இருந்து விமர்சனங்களை இரண்டாம் நிலை குழு ஒன்று சேகரித்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

உலக சுகாதார அமைப்பும் இதனை பாதுகாப்பு முறைகளில் ஒன்றாக ஊக்கப்படுத்தி வந்த நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், இதன் விலை மற்றும் துணையிடம் ஒப்புதல் பெறுவது உள்ளிட்டவை விவாத பொருளாகவே உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jappan government apporeved abortion medicine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->