ஜப்பான் : குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ. 42,000 வழங்க அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் உள்ள மக்கள் தென்கொரியா நாட்டைப் போன்று குழந்தைப் பெற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதில்லை. இதன் காரணமாக, நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 

அதன் படி, நாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தை பிறந்த பிறகு, தம்பதிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,52,000 அதாவது ஜப்பான் நாட்டின் படி 4,20,000 யென் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு மேலும் கூடுதலாக ரூ. 42,000 வழங்க அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத் துறை சார்பில், முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் வருகிற 2023ஆம் நிதியாண்டு முதல் அமல்படுத்துவதற்கும் ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் பொருளாதார பற்றாக்குறை, உறுதித்தன்மையற்ற வேலைவாய்ப்பு போன்றவற்றால் குழந்தை பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jappan government extra forty two thousand increase for couples borning baby


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->