உடல்நலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவி செய்தே, கின்னஸ் சாதனை புரிந்த WWE ஜான்சீனா.!
john seena in Guinness record for helping children
WWE மல்யுத்த போட்டியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் தான் ஜான் சீனா. தனித்துவமான தாக்குதல் ஆட்டங்களின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் ரசனைக்கு உண்டான ஹீரோவாக இருக்கிறார்.

இவர் ஹாலிவுட் சினிமாவில் திரைப்பட நடிகராகவும் இருக்கின்றார். பல ஆண்டுகளாகவே ஜான் சீனா உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். மேக் எ விஷ் எனும் அறக்கட்டளை மூலமாக தீவிரமான உடல்நல பாதிப்பில் இருக்கும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி வருகின்றார்.
அவர்களுக்கு பிடித்த நபர்களை சந்திக்க உதவி செய்வது, பிரபலங்களின் மூலமாக குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஜான் சினா செய்து வருகின்றார். இதன் மூலம், அவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட 650 குழந்தைகளின் விருப்பங்களை இதுவரை நிறைவேற்றி இருக்கிறார். இதுவரை எந்த பிரபலங்களும் 200 குழந்தைகளுக்கு மேல் விருப்பங்களை நிறைவேற்றியதில்லை.
அப்படி இருக்க ஜான் சீனா 650 குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றியதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஜான் சீனாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
English Summary
john seena in Guinness record for helping children