வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வேன்.! 31 உயிர்களை பலி.. பதைபதைக்கும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக கென்யாயாவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. அங்கிருக்கும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் வெள்ள அபாயத்தால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் நைரோபி பகுதியில் இருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாடல் குழு ஒன்று வேனில் சென்றது.

அப்போது வழியில் என்.சி.யு ஆற்று பாலத்திற்கு மேலே வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் சென்றது. ஆனால் அவர்கள் வெள்ள பாதிப்பை பெரிது படுத்தாமல் ஆற்றை கடக்க முயற்சித்தனர்.

அப்பொழுது பாதி பாலத்திற்கு மேல் பேருந்து சறுக்கி தண்ணீருக்குள் விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 31 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரை விட்டனர். இது குறித்து அறிந்த மீட்பு குழு உடனடியாக சென்று 12 பேரை உயிருடன் காப்பாற்றியது.

திருமண நிகழ்ச்சிக்காக சென்ற பொழுது கொத்தாக 31 பேர் பலியான சம்பவம் அந்த நாட்டில் மிகப்பெரிய சோகத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த விபத்து வீடியோ இணையதளத்தில் வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kenya 31 died in flood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->