அட கடவுளே., உலக மக்களை அதிரவைத்த புகைப்படம்.!
kenya giraffe starved to death
கென்யா நாட்டில் நிலவிவரும் வரட்சி காரணமாக, ஒட்டக சிவிங்கிகள் இறந்து கிடக்கும் புகைப்படம் உலக மக்களை பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
கென்யா நாட்டில் கடுமையான வெயில் காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டகச்சிவிங்கிகள் இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்து கிடக்கும் புகைப்படம் ஒன்று, உலக மக்களை பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
உணவு மற்றும் தண்ணீர் இன்றி பல ஒட்டகச்சிவிங்கிகள் உயிரிழக்கக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வரட்சி காரணமாக ஓடைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்த காரணத்தினால், ஒட்டகச்சிவிங்கி தண்ணீரை தேடி சென்றபோது, சேற்றில் சிக்கி இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் சொல்கிறது.
வடக்கு கென்யாவின் பெரும்பாலான இடங்களில் மழைப்பொழிவு 30 சதவீதம் குறைந்துள்ளதன் காரணமாகவே இந்த வறட்சி ஏற்பட்டுள்ளது என்று, அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர்.
வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வதற்கு உலக நாடுகளிடம் உதவி கேட்டு உள்ளதாக தெரிகிறது.
English Summary
kenya giraffe starved to death