அமெரிக்கா, தென் கொரியா மீது உடனடி தாக்குதல் நடத்த தயார் - கிம் ஜாங் உன்னின் சகோதரி எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது உடனடி  தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் வடகொரியாவிற்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் சில ஆண்டுகளாக போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று அமெரிக்கா மற்றும் தென்கொரியாய் இணைந்து கொரிய தீபகற்பத்தில் B-52 குண்டுவீச்சு போர் விமானங்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து வடகொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், இன்று அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க படைகள் மற்றும் தென் கொரிய கைப்பாவை இராணுவத்தின் அமைதியற்ற இராணுவ நகர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். எங்களின் தீர்ப்பின்படி எந்த நேரத்திலும் சரியான, விரைவான மற்றும் உடனடியான தாக்குதல் நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kim Jong Un sister warns North Korea ready to act against US and South Korea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->