கூகுள் டூடுல் விருதை பெற்ற கொல்கத்தா சிறுவன்.. அடுத்த 25 ஆண்டுகள் இப்படியா இருக்கும்?!
kolkata child get google doodle award
2022 -ற்கான கூகுள் டூடுல் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் இந்தியாவிற்கான டூடுல் விருதை கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த ஸ்லோக் முகர்ஜி என்ற சிறுவன் வென்றுள்ளான். இன்று அவருடைய டூடுல் கூகுள் பக்கத்தில் வெளிஇடப்பட்டுள்ளது.
அந்த டூடுளை இந்திய ஆண் சென்டர் ஸ்டேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. தன்னுடைய டூடுல் பற்றி ஸ்லோக் முகர்ஜி, "வரும் 25 வருடங்களில் நிறைய விஞ்ஞானிகள் இந்தியாவில் இருப்பார்கள். மனிதர்களிடம் தேவைக்காக நட்பு ரீதியான தொடர்பில் ரோபோக்கள் உருவாக்கப்படும்.
மேலும், இன்டர் கேலக்டிக் போக்குவரத்து இந்தியாவில் நடைபெற போகின்றது. அதன்படி பூமிக்கும், விண்ணுக்கும் போக்குவரத்து நடக்ககைகூடும். யோகாவும், ஆயுர்வேதமும் இந்தியாவில் மிக முக்கியத்துவம் பெறக்கூடும்." என்று கூறியுள்ளார்.
இந்த கூகுள் டூடுல் விருதை பெற இந்தியாவிலிருந்து 1,15,000 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதிலிருந்து வெறும் 20 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் பட்டியலில் அவர்கள் இடம்பெற்றனர். அவர்களின் படைப்புகள் பொதுமக்கள் வாக்களிக்கின்ற வகையில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதில் ஸ்லோக் முகர்ஜியின் படைப்பு வெற்றி பெற்றது. இவரது 4 பேர் கொண்ட குழு வின்னர்களாக தேர்வாகினர்.
English Summary
kolkata child get google doodle award