சோயுஸ் விண்கலத்தில் கசிவு.! புதிய விண்கலம் அனுப்ப ரஷ்யா பரிசீலனை.! - Seithipunal
Seithipunal


விண்வெளியில் ஆராய்ச்சி பணியை மேற்கொள்வதற்காக ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் இரண்டு ரஷ்ய வீரர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி சோயுஸ் விண்கலத்தில் குளிரூட்டும் பொருள் அதிக அளவில் கசிந்துவிட்டதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ், மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா அதிகாரிகள் தெரிவித்ததாவது, விண்கலத்தில் குளிரூட்டும் கலன் அதிக அளவில் கசிந்து விட்டதால், பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கலம் நுழையும் பொழுது விண்வெளி வீரர்களால் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியுமா என்பது குறித்து பகுப்பாய்வு செய்து வருகிறோம்.

ஆனால் அது சாத்தியமில்லாத நிலையில், மார்ச் மாதம் 2023ஆம் ஆண்டு அனுப்பப்படுவதாக இருந்த சோயுஸ் விண்கலத்தை, விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப ஆட்கள் இல்லாமல் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது சேதமடைந்த சோயுஸ் விண்கலம் விண்வெளி வீரர்கள் இல்லாமல் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக நாசா மற்றும் ரோஸ்காஸ்மோஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leaked Soyuz Spacecraft Russia Considers Sending New Spacecraft


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->