பிரதமர் பதவியை ராஜினாமா செய்த லிஸ் டிரஸ்! அடுத்த பிரதமராக போகும் ரிஷி சுனக்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார நடவடிக்கைகள் சீர்திருத்தம் மேற்கொள்ண்டார். இதன் காரணமாக பொருளாதாரம் மந்த நிலைக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் தான் காரணம் என தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். டாலருக்கு நிகரான இங்கிலாந்து பவுண்டின் மதிப்பு குறைந்ததால் நிதி அமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்கை பதவியில் இருந்து நீக்கினார் இங்கிலாந்து பிரதமர். 

நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நிறத்தின் பொழுது தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த லிஸ் டரஸ் "போராளிகள் என்றும் விலகிச் செல்ல மாட்டார்கள்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இவர் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்தில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளார். அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liz Truss resigned as Prime Minister Rishi Sunak will be the next Prime Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->