உலகிலேயே பெரிய மூக்கு.. முறியடிக்கப்படாத கின்னஸ் சாதனை.! - Seithipunal
Seithipunal


உலகில் மிக நீளமான மூக்கு கொண்ட ஒரு நபரின் சாதனையானது நூற்றாண்டுகள் கடந்து கூட இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. 

பல பேர் அதிகப்படியான உயரம், நீளமான நகம், நீளமான முடி என்று கின்னஸ் சாதனைகள் செய்ததை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகிலேயே நீளமான மூக்கு கொண்ட நபர் பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தாமஸ் வெடர்ஸ். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்தான் இந்த நபர்.

உலகின் மிக நீளமான மூக்கை கொண்டவராக இவர் அறியப்படுகிறார். நிறைய சர்கஸ் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு புகழ் பெற்றவர் தான் இவர். அந்த காலத்தில் கேமராக்கள் இல்லாத காரணத்தால் அவரது புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. ஆனால் ஓவியங்கள் மற்றும் மெழுகு சிலைகளை கொண்டு அவரது மூக்கை நம்மால் பார்க்க முடியும். 

அவரது மூக்கின் நீளம் 7.5 அங்குலம் அதாவது மொத்தம் 19 சென்டிமீட்டர் ஆகும். அவரது மூக்கை அடையாளமாகக் கொண்டுதான் நிறைய கார்ட்டூன் கதாபாத்திரங்களில் மூக்கு நீளமாக வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் தனது 50 வயதில் மரணம் அடைந்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Long Nose Guinness World record


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->