லாரி- மினி பேருந்து மோதி கோர விபத்து: 25 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


பிரேசில், பாஷியா பகுதியில் உள்ள கடற்கரைக்கு ஒரு மினி பேருந்தில் சென்ற சுற்றுலா பயணிகள் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 

மினி பேருந்து ஜெக்குயூப் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 25 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஜாக்கோபினா நகராட்சி 3 நாட்களுக்கு தொடர்ந்து துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் முந்தி செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry Mini Bus Collision Accident 25 Tourists Die


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->