காதலர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்.!
Lovers day special Google doodle
உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
![](https://img.seithipunal.com/media/love couple.jpg)
பிரபல இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.
அந்த வகையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இதய வடிவிலான கண்ணீர் துளிகளுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு உள்ளது.
English Summary
Lovers day special Google doodle