இங்கிலாந்து நாட்டில் திருடப்பட்ட சொகுசு கார்.! பாகிஸ்தானில் மீட்பு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானில் மீட்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பென்ட்லி நிறுவனம், பென்ட்லி முல்சானே ரக கார்களை தயாரித்து வருகிறது. இந்த வகை சொகுசு கார் அண்மையில் லண்டனில் திருடுபோனது தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு கார் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இங்கிலாந்து அரசு சார்பில் பாகிஸ்தான் அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் சிந்து மாகாண சுங்கவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், கராச்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் பென்ட்லி முல்சானே சொகுசு கார் இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தக் காரில் பாகிஸ்தானின் பதிவு எண் இருந்தது.

இதையடுத்து காரை வைத்திருந்த ஜமீல் ஷபி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், நவித் பில்வாணி என்பவர் தன்னிடம் காரை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில், சொகுசு கார் கப்பல் மூலம் பாகிஸ்தானுக்கு கடத்திய கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட சொகுசு கார் விரைவில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Luxury car stolen in England recovered in Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->