அமெரிக்காவில் அதிர்ச்சி.. பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து அத்தை, மாமாவிற்கு சமைத்து கொடுத்த நபர்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இருப்பினும், லாரன்ஸ் பால் ஆண்டர்சன் மூன்று ஆண்டு தண்டனை மட்டும் அனுபவித்த நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். 

இந்த நிலையில், ஆண்டர்சன் சிறையில் இருந்து வெளிவந்த சில நாட்களிலேயே ஓக்லஹோமா மாகாணத்தில் ஒரு பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, ஆண்டர்சன், ஓக்லஹோமா மாகாணத்தில் வசித்து வரும் ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணின் இதயத்தை வெட்டிக் எடுத்து அதனை தனது அத்தை மற்றும் மாமாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்று உருளைக்கிழங்குடன் சமைத்து பரிமாறியுள்ளார். 

அதன் பின்னர் ஆண்டர்சன் தனது அத்தை, மாமா மற்றும் நான்கு வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார். இதைப்பார்த்த க்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆண்டர்சனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதையடுத்து, நீதிமன்றம் ஆண்டர்சனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested in america for woman heart cuts and cook


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->