உ.பியில் கொடூரம் - பெற்றத் தாயை நடுத்தெருவில் இழுத்துச் சென்ற மகன் - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


உ.பியில் கொடூரம் - பெற்றத் தாயை நடுத்தெருவில் இழுத்துச் சென்ற மகன் - நடந்தது என்ன? 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே குஹார் கிஷன்பூர் பரால் கிராம பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வயது முதிர்வடைந்த தாயை வீட்டில் வைத்து பராமரிக்காமல், நடுத் தெருவில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை தட்டிக் கேட்டுள்ளனர். இருப்பினும் அவர் தனது தாயை தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். தன்னை விட்டு விடுமாறு அந்த தாய் கெஞ்சியும் அதனைக் கேட்காமல் தெருவில் இழுத்துச் சென்று ஊரின் எல்லையில் கொண்டு போய் தள்ளியுள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தனர். அதன் படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் விரிவான விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பெற்றத் தாயை மகன் தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man dragged mother down street in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->