5 வயது இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொலை.! அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வயது சிறுமியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக ஜோசப் லீ ஸ்மித் என்பவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் விமல். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மாங்க்ஹவுஸ் டிரைவில் உள்ள பார்க்கிங் பகுதியில் 35 வயதான ஜோசப் லீ ஸ்மித் என்பவருக்கும், மற்றொரு நபருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஆத்திரமடைந்த ஸ்மித் துப்பாக்கியால் சுட்டதில், அப்பகுதியில் ஹோட்டலின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மியா பட்டேல் மீது குண்டு பாய்ந்தது.

இந்நிலையில் மூன்று நாள் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொலை செய்த குற்றத்திற்காக 60 ஆண்டுகள், நீதியை முடக்கியதற்காக 20 ஆண்டுகள் மற்றும் பட்டேலை சுட்டு கொன்றதுடன் தொடர்புடைய மற்ற வழக்குகளுக்கு 20 ஆண்டுகள் என 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man sentenced to 100 years jail for killing 5 yrs indian origin girl in America


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->