நேபாளம் : நாடாளுமன்றத்தில் பிரதமர் காரில் ஏறும் போது திடீரென தீக்குளித்த நபர்.! காரணம் என்ன?
man sucide attempt in nepal parliment
நேபாளத்தில் பிரதமர் பிரசந்தாவின் தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 19-ந்தேதி நேபாள நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், சி.பி.என்-யூ.எம்.எல். கட்சியின் வேட்பாளரான தேவ் ராஜ் கிமிரே, வெற்றி பெற்றார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இருந்து இன்று மதியம் பிரதமர் பிரசந்தா வெளியேறி காரில் ஏறி சென்றார்.
அப்போது, வாலிபர் ஒருவர் டீசலை எடுத்து, திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் இல்லம் மாவட்ட பகுதியை சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சாரியா என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை கீர்த்திப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
English Summary
man sucide attempt in nepal parliment