இங்கிலாந்தில் திருமண வயது 18 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


குழந்தைத் திருமணத்தை தடுக்கும் வகையில் இந்தியாவில் திருமணத்திறான குறைந்தபட்ச வயது 18 என்ற சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்தில் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 18ஆக தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில், 16, 17 வயதுகளை உடையவர்களுக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக புகார் நீண்ட காலம் எழுந்து வந்தது. இதனால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசுகள் திருமணத்திற்கான குறைந்த வயதை 18ஆக உயர்த்தி சட்டம் கொண்டு வந்துள்ளன. 

இனிமேல், இங்கிலாந்தில் எந்த சூழ்நிலையிலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அது சட்டப்படி குற்றம். அதையும் மீறி திருமணம் செய்து வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தை மீறினால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்கு கீழ் குழந்தை திருமணம் நடைபெற்றதாகக் கூறி 118 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தகவல் தெரிவிக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage age rised to eighteen in england


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->