21,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ரூ.8,000 கோடி செலவு - மெட்டா நிறுவனம் அதிர்ச்சி தகவல் - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான மெட்டா கடந்த ஆண்டு 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன்படி, நவம்பர் 2022ல் 11,000 ஊழியர்களையும், மார்ச் 2023ல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இதில் பெரும்பாலும் மார்கெட்டிங், சைட் செக்யூரிட்டி, என்டர்பிரைஸ் இன்ஜினியரிங், ப்ரோகிராம் மேனேஜ்மென்ட், கன்டென்ட் ஸ்டாட்டர்ஜி மற்றும் கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவிலுள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவெடுத்தது.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான பத்திரங்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் பணி நீக்க நடவடிக்கைக்கு தேவையான தொகை பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளது. இதில் நிறுவன பணியாளர்களுக்கான பணி நீக்க ஊதியம், நிலுவைத் தொகை, திட்ட செலவு மற்றும் தனிப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே ஒரு பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் 8000 கோடி செலவாகும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் மெட்டா நிறுவனத்தின் பொருளாதார செலவை ஈடு கட்டுவதற்கும், நிறுவன மறு கட்டமைப்பிற்காக ஏற்படும் செலவை குறைக்கவே பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meta says 8000 crore cost to lay off 21000 employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->