மூன்றாவது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு.! - Seithipunal
Seithipunal


மூன்றாவது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு.!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணத்தினால் சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைப்பதற்காக தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில் டுவிட்டர், தேடல் நிறுவனமான கூகுள், மைக்ரோசாப்ட்,  முகநூல், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஆள்குறைப்பை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அதன் படி இதுவரைக்கும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 

ஆள்குறைப்பு நிறுவனம் செய்த நிறுவனங்களில் ஒன்றான முக நூலின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இந்த நிலையில், மெட்டா நிறுவனம் தற்போது மூன்றாவது கட்டமாக மேலும் நான்கு ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metta company decided emoployees lay off


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->