ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லிங்க்டு இன் நிறுவனம் - நடந்தது என்ன?
microsoft linked in company 668 employees lay off
கொரோனா காலத்தில் வணிக நிறுவனங்கள் கடும் சரிவைக் கண்டதால், எதிர்கால தொழில்நுட்பங்களில் முதலீடு செய்கிறோம், வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுகிறோம், நட்டத்தை தவிர்க்கிறோம் என்ற பெயரில் ஆட்குறைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்தது. அதில், முதல் கட்டமாக சுமார் 10 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. இந்த ஆட்குறைப்பினை, லிங்க்டு இன் உள்ளிட்ட தனது இதர நிறுவனங்களிலும் அமல்படுத்த ஆரம்பித்தது.
அதன் படி, சமூக வலைதள தொழில் நுட்ப நிறுவனமான லிங்க்டு இன் பணியாளர்களில் 668 பேர் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது லிங்க்டு இன் நிறுவனத்தின் இரண்டாவது ஆட்குறைப்பு ஆகும்.
இந்தப் பணிநீக்கம் என்பது மொத்த ஊழியர்களில் 2.5% பேர் ஆவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே லிங்க்டு இன் நிறுவனத்தின் வருவாய் இறங்குமுகத்தில் இருந்ததால், செலவினத்தை குறைக்கும் முயற்சியில் ஆட்குறைப்பு அமலாகிறது. மேலும், புதிதாக பணிக்கு ஆளெடுப்பதும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
English Summary
microsoft linked in company 668 employees lay off