உக்ரைன் தலைநகர் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்படும்! ரஷ்யா தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து ஒரு மாத காலமாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. போருக்கிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை துருக்கி மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இஸ்தான்புல் நகரில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரங்கள் மீதான ராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

நடுநிலை மற்றும் அணு ஆயுதம் இல்லாத நிலை ஆகியவற்றை நோக்கி உக்ரைன் நகர்வதால் இந்த பேச்சுவார்த்தையில் சில சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில் அர்த்தமுள்ள விவாதங்கள் இருந்ததாகவும், உக்ரைனின் முன்மொழிவுகள் ரஷ்ய அதிபர் புதினிடம் வழங்கப்படும் வழங்கப்படும் எனவுன் ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Military force to be reduced in Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->