ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட வெளியுறவு துறை அமைச்சர் - மூவர்ண கொடியுடன் வரவேற்பு..! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டிற்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதனை முடித்து கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று அந்நாட்டின் கேன்பெர்ரா பகுதிக்கு சென்றுள்ளார். 

அங்கு அவருக்கு, இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் வகையில் நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "மூவர்ண கொடியின் வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து உள்ளேன். ஆஸ்திரேலியா நாட்டின் பழைய நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய வண்ணத்தில் காட்சியளிப்பதைக் காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேன்பெர்ரா மற்றும் சிட்னி ஆகிய நகரங்களுக்கு அவர் செல்கிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், நடப்பு ஆண்டில் முதன்முறையாக மெல்போர்ன் நகரில் நடந்த குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். 

இதைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது சுற்றுப்பயணம் இதுவே ஆகும். இந்த சுற்றுப்பயணத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சக வெளியுறவு துறை அமைச்சரான பென்னி வாங்கை சந்தித்து,13-வது வெளியுறவு அமைச்சர் கட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், இதேபோன்று, அந்நாட்டு துணை பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சரான ரிச்சர்டு மார்லெஸ்சையும் சந்தித்து பேசுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister of Foreign Affairs going to austrelia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->