மகிழ்ச்சி! ட்ரூத் சோசியல் மீடியாவில் இணைந்த மோடி...! முதல் பதிவாக என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி...! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் கலந்துரையாடினார். அப்போது மோடி , 'டிரம்ப் துணிச்சலானவர்; சுயமாக முடிவெடுப்பவர்' என்று அமெரிக்க அதிபருக்கு புகழாரம் சூட்டினார்.

இந்த வீடியோவை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக கணக்கில் பகிர்ந்தார். இது குறித்து ஆங்கில மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி:

தனது முதல் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது," ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் ஆக்கபூர்வ உரையாடல்களில் ஈடுபட எதிர்பார்ப்புடன் உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல்:

மேலும் தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், 'எனது நண்பர் அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம், உலகளாவிய பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்'எனத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது இணையதளத்தில் பரவலாகி வருகிறது.மேலும் நெட்டிசன்கள் இதுகுறித்த விமர்சனங்களை கமெண்ட்களில் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi joins Truth Social Media Thanks to my friend President Trump for the first post


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->