பூமியை விட வேகமாக ஓடும் நிலவின் நேரம் - துல்லியமாக வெளியிட்ட நாசா.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த 1969-ம் ஆண்டு நாசா தனது அப்போலோ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவுசெய்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு "ஆர்டெமிஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது. இந்த நிலையில், நாசா விஞ்ஞானிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த ஆராய்ச்சி அறிக்கையில், "நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. 

நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது. ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.

52 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர். அப்போது இருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான் நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

moon and earth time nasa published


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->