பாகிஸ்தானில் பரபரப்பு.. மாற்று மதத்தினர் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.  மேலும் பாகிஸ்தானில் இந்து கிறிஸ்தவம் சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரும் சிறுபான்மையினராக உள்ளனர். இதில், சிறுபான்மையினரின் மத வழிபாட்டு தலங்களை அவ்வப்போது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்துவ மதத்தினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமிய மத நூலான குர்ஆனின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் கிடந்தன.

மேலும் அந்தப் புத்தகத்தில் மத நிந்தனை தொடர்பான கருத்துக்கள் சிவப்பு நிற பேனாவால் எழுதப்பட்டிருந்தன. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இஸ்லாமியர் மத நூலை மாற்று மதத்தைச் சேர்ந்த இருவர் அவமதித்துவிட்டதாக சமூக வலைதளங்களிலும் கருத்துக்கள் பரவின. இதனையடுத்து இஸ்லாமிய மத நூல் அவமதிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் கிறிஸ்துவ மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கும்பலாக சென்று கிறிஸ்தவ மத வழிபாட்டு தளம் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர்.

இந்த தாக்குதல் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், ஒட்டுமொத்தமாக 5 கிறிஸ்துவ மத வழிபாட்டு தலங்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினரின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இதுவரை 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களால் பஞ்சாப் மாகாணம் முழுவதும் பதற்றுமான சூழ்நிலை நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslims attack Christian in Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->