தனியார் நிறுவனத்தில் நிர்வாண சோதனை.. 3 பெண்கள் கைது.! - Seithipunal
Seithipunal


கென்யாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்களை நிர்வாணமாக சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் 3 மேலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய கென்யாவின் லிமிரு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தவறான குப்பைத் தொட்டியில் பயன்படுத்திய சானிட்டரின் நாப்கின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பெண் மேலாளர்கள் மூன்று பேர் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால் ஊழியர்கள் யாரும் உண்மையை ஒத்துக் கொள்ளாததால் அந்த ஊழியர்களில் யாருக்கு மாதவிடாய் என்பதை அறிய ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நிறுவனத்திற்கு வெளியே சானிட்டரி நாப்கின்களை வீசி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அந்த நிறுவனம் மூன்று பெண் மேலாளர்களையும் பணியிடைநீக்கம் செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும் இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பெண் மேலாளர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naked search in a private company 3 women arrested in Kenya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->